மீண்டும் ஊரடங்கு | ‘சீனாவில் வேகமாய் பரவி வரும் புதிய வகை வைரஸ்’

சீனாவில் மிகவேகமாய் புதியவகை வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அங்கு ஒரு சில இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீனாவின் தொழிற்சாலை நிறைந்த பகுதியாக கருதப்படும் சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் தொற்று பெருக்கெடுத்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன.

“ வைரஸின் வகை, வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள், பரவும் தன்மை குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், அது குறித்த தகவலும் வெகுவிரைவில் வெளியாகும் எனவும் சீன ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன “

About Author