கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,660 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 03 2022

Corona Updates In India 26 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,660 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,660 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,100 பலிகளும் பதிவாகி இருக்கிறது. இதில் 4,005 கோவிட் அல்லாத இறப்புகள் என்று கூறப்படுகிறது. ஒட்டு மொத்த கொரோனா பலியும் 5,20,855 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ மீட்பு விகிதம் தேசத்தில் 98.75 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,741 ஆக குறைந்து இருக்கிறது “

About Author