தன் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் உயர் நீதிமன்றத்தில் மனு

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கென ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி அதில் கொடிகட்டி பறந்தவர் பப்ஜி மதன். தொடர்ந்து தான் வெளியிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெண்களை இழிவான வார்த்தைகளோடு பேசியும் வந்தார்.

இதனால் நீதிமன்றம் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்ட மதன் தற்போது தன் மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது ’தன்னுடைய தொழில் போட்டியாளர்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தன்னுடைய வீடியோக்களை எடிட் செய்து வைரல் ஆக்கி உள்ளதாகவும், ஆதலால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்’

“ யாருக்கு நம்மை தெரிய போகிறது யார் நம்மை என்ன செய்ய போகிறார்கள் என்று இணையத்தில் எதையும் வெளியீடாதீர்கள் நமக்கு இரண்டு கண்கள் தான் இணையத்திற்கு பல கண்கள் அது உங்களை உற்று நோக்கி கொண்டே தான் இருக்கும் “

About Author