பதவியை ராஜினாமா செய்யும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காரணம் என்ன?

Imran Khan Pakistan Prime Minister Soon Resign His Post

Imran Khan Pakistan Prime Minister Soon Resign His Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெரும் கடன் சுமையையும் தலையில் ஏற்றி வைத்து இருக்கிறது. இதனால் எதிர்கட்சிகள் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவே, தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே இம்ரான் கான் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

” தனது தெஹ்ரிக் கட்சியிலேயே தனக்கு ஆதரவு இல்லாததினாலும், நாளை நடக்க இருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்னும் பயத்திலும் இம்ரான்கான் முன்னதாகவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக காரணம் சொல்லப்படுகிறது “

About Author