TATA IPL 2022 | RR vs SRH | ’61 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்றது ராஜஸ்தான்’

டாடா ஐபிஎல் 2022-யின் ஐந்தாவது போட்டியில் ஹைதராபாத்தை வென்று இருக்கிறது ராஜஸ்தான்.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, சாம்சன், படிக்கல், ஹெட்மெயரின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

“ 27 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author