முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Kaathu Vaakkula Rendu Kadhal Shoots Wrapped Up

Kaathu Vaakkula Rendu Kadhal Shoots Wrapped Up

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் இணையும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ஏப்ரல் 28-யில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

“ ஏற்கனவே இந்த காம்போ நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலம் ஹிட் அடித்து இருந்தது, அதன் காரணமாகவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடம் மேலோங்கி இருக்கிறது“

About Author