Mouna Ragam 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.04.2022

Mouna Ragam 2. 12.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா எப்போதும் போல் வருண் வேலைக்கு கிளம்பும் நேரம் வந்ததும் பரபரப்பாக இருந்தார். அவருக்கு காபி கொடுப்பது சாப்பாடு செய்வது, அவரை கிளப்பும் வேலையாக இருந்தார். ஆனால் சத்யா நெருங்கி வந்து பேச பேச, வருண் விலகி சென்றார். முகம் கொடுத்து பேசவில்லை. சத்யா என்ன என்னவோ பேசினார். ஆனால் வருண் கண்டுகொள்ளவில்லை. சத்யா என்ன பிரச்சினை என்று கேட்கவும் செய்தார் ஆனால் வருண் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. நீ எதை மறைக்கிராய் என்று உனக்கே தெரியும் யோசித்து பார் என்று கிளம்பிவிட்டார். சத்யா ஒன்றும் புரியாமல் தவித்தார். என்ன தவறு செய்தோம் எதற்கு இப்படி பேசுகிறார் என்று ஒன்று புரியவில்லை. அதே நேரம் ஸ்ருதி தருண் கிளம்ப ஏற்பாடு செய்தார். தருணுக்கு சட்டை எடுத்து கொடுப்பது, அவருக்கு காலை உணவு தயாரிப்பது என்று ஸ்ருதி அவரால் முடிந்ததை செய்தார். தருண் மனதில் இடம் பிடிக்க என்ன என்னவோ செய்தார். தருண் அவர் கொடுத்த சாப்படையும் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author