நீங்க படத்த பத்தி என்ன வேணாலும் சொல்லிக்கோங்க, நாங்க 100 கோடிய தாண்டியாச்சு! பாக்ஸ் ஆபிஸ்சில் கலக்கும் ‘பீஸ்ட்’!

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பீஸ்ட்’ இரண்டே நாளில் உலகளாவிய அளவில் 100 கோடியை கடந்து இருக்கிறது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி உலகளாவிய அளவில் வெளியாகி இருந்த ‘பீஸ்ட்’ கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் இரண்டே நாளில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. ’நீங்க என்ன வேணாலும் சொல்லிகோங்க, நாங்க தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார் நடிகர் விஜய்.

“ எதிர்பார்ப்பு, படத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை, விஜய் என்ற தனிமனிதனுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் இதனால் மட்டுமே இந்த சாதனைகள் என்பது சாத்தியம் “

About Author