Mouna Ragam 2 Today Episode | 26.04.2022 | Vijaytv

Mouna Ragam 2.26.04.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா இங்கு போவது என்று தெரிமல் நின்ற போது ரவுடிகள் அவரை வம்பு இழுத்தார்கள். அந்த நேரம் போலீஸ்காரர் ஒருவர் வந்து சத்யாவை அவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். சத்யா பயந்து தயங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும் அந்த போலீஸ்காரரின் மனைவி சத்யாவை அழைத்து சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்தார். சத்யா சாப்பிட அதயங்கினார். ஆனால் பின் சத்யாவை சாப்பிட வைத்தார் அவர். பின் அந்த போலீஸ்காரர் சத்யாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் சத்யா அங்கு போக முடியாது என்றார். பின் அவர் பேத்தி அனு இருப்பதை சத்யா பார்த்தார். அனு தூங்க மாட்டேன் என்று அடம்பிடித்து அழுததால் சத்யா யார் இந்த குழந்தை என்று கேட்டார். அது எங்கள் பேத்தி என் மகளும் மருமகனும் லண்டனில் வேலைக்கு சேர்ந்து இப்போது தான் போனார்கள். அவர்கள் திரும்பி வந்து அனுவை கூட்டி செல்லும் வரை நான் தான் பார்த்து கொள்ளவேண்டும் என்று கூறினார். பின் அடம் பிடித்த அனுவை பாட்டு பாடி தூங்க வைத்தார் சத்யா. அதை பார்த்து போலீஸ்காரர் ஆச்சர்யபட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..