TATA IPL 2022 | Match 51 | ‘குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை’
டாடா ஐபிஎல் 2022-யின் 51 ஆவது போட்டியில் குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.
முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இரண்டு பிக் ஹிட்டர்கள் இருந்த போதும் கூட குஜராத் அணி கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
“ நான்கு சிக்ஸர்கள், இரண்டு போர்களுடன் 21 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய மும்பை அணியின் டிம் டேவிட் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “