டாடா ஐபிஎல் 2022-யின் 67 ஆவது போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு.
முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி விராட் கோஹ்லி 73(54) மற்றும் டூ பிளஸ்சின் 44(38) அதிரடியால் 18.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் நான்காவது இடத்தை மறுபடியும் மீட்டு இருக்கிறது பெங்களுரு.
“ 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த விராட் கோஹ்லி ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “