Raja Rani 2 Today Episode | 31.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நம் பார்வதியை ஒரு தீவிரவாத கும்பல் தான் கடத்தி வைத்து இருப்பதாக கூறினார். இதை கேட்டதும் சரவணன் மற்றும் செந்தில் இருவரும் அதிர்ந்து போனார்கள். மேலும் இந்த திருவிழாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க திட்டம் இருப்பதாகவும் கூறினார். இதை கேட்டதும் செந்தில் முதலில் அம்மா அப்பா நம் குடும்பத்தில் அனைவரையும் தெரிந்தே எதற்கு இங்கு அழைத்து வர வேண்டும் என்று கோவம் கொண்டார். சரவணனும் வீட்டுக்கு அனைவரையும் அனுப்பிவிடலாம் என்று கூறினார். ஆனால் சந்தியா இந்த விஷயம் தெரிந்த போலீஸ்காரர்களுக்கு குடும்பம் இல்லையா? நாம இப்போ தேட வேண்டியது பார்வதியை மட்டும் தான் என்று புரிய வைத்தார். பின் மூவரும் எல்லா பக்கமும் பார்வதியை தேட ஆர்பித்தார்கள். செல்வம் பார்வதி இருக்கும் வண்டிக்கு சென்று அவரது திட்டங்களை கூறினார். மேலும் கூட்டம் அதிகம் ஆனதும் பார்வதியை உள்ளே அனுப்ப வேண்டும் என்று கூறினார். சக்கரையை அவ்வபோது கண்காணித்துக்கொண்டார். அவனை எங்கும் விளையாடவிடாமல் பாதுகாத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..