Asia Cup QF | IND vs AFG | கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை!

AFC Qualifiers Big Fight Between India And Afghanistan Players

AFC Qualifiers Big Fight Between India And Afghanistan Players

ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கால்பந்தாட்டம் நடந்ததோ இல்லையோ கூடவே குத்துச்சண்டைகளும் அரங்கேறின.

முதல் தகுதிச்சுற்றில் 2-0 என்ற கணக்கில் இந்தியா, கம்போடியாவை வீழ்த்தி இருந்த நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தானையும் நேற்று 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு விளையாட தகுதி பெற்றது. இந்த தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் பெரும் மோதலை ஆரம்பித்தனர். இந்திய வீரர்களும் அதற்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

“ இந்த வெற்றியின் மூலம் சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அடுத்து வரும் போட்டிகளில் ஜெயித்தாலும் கூட ஆசிய கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது “

About Author