Mouna Ragam 2 Today Episode | 17.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.06.2022

Mouna Ragam 2. 17.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் மனைவி சத்யா எப்படியும் தன்னுடன் வந்துவிட வேண்டும் என்று நினைத்து பரிகாரம் செய்ய கோவிலுக்கு சென்றார். அங்கு பழனியை பார்த்து அவருக்கு நடந்ததை புரிய வைக்க முதிர்ச்சி செய்தார். தான் அந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பவே இல்லை என்று கூறினார். மேலும் சத்யா இனி சக்தி என்று ஏற்றுக்கொள்ள கொஞ்ச அவகாசம் தேவை பட்டது அதற்குள் என்ன என்னவோ நடந்து விட்டது என்று கூறினார். அதையும் பொறுமையாக பழனி கேட்டுவிட்டு கடவுளிடம் குழப்பமாக இருப்பதாக கூறினார். மேலும் சத்யா வருணை எஸ்டேட்டில் காணவில்லை என்று தேட ஆர்மாபிதார். அப்போது வழியில் சுகுமார் மற்றும் அவரது மனைவியை பார்த்தார். அப்போது தான் கோவிலுக்கு வருண் ஒரு வேண்டுதல் செய்ய போய் இருப்பது தெரியவந்தது. என்ன வேண்டுதல் என்று கேட்டார். தீபம் ஏற்றி கையில் வைத்துக்கொண்டு மூண்டு முறை கோவிலை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். இதை கேட்டதும் சத்யா பதறினார். அவர் நெருப்பை பார்த்தால் முடியாமல் போய் விடும் என்று உடனே கோவிலுக்கு விரைந்தார். போகும் வழியில் தருண் மற்றும் ஸ்ருதியை பார்த்தார். அவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த கோவிலுக்கு விரைந்தார். ஆனால் அவர்கள் வருவதற்குள் வருண் அந்த விளக்கில் இருந்த நெருப்பை பார்த்து அலற ஆரம்பித்தார். பின் மயங்கினார். இதை பார்த்த பழனி மீண்டும் அதிர்ச்சியில் இருந்தார். தருண் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந்த விஷயம் மனோகருக்கு தெரிய வந்தது. உடனே அவரும் தான்டிக்குடிக்கு கிளம்பினார். வந்து வருண் எப்படி உள்ளார் என்று பார்க்க வந்தார். மேலும் அவர் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தவித்தார். வீட்டுக்கு போய் விடலாம் என்று கேட்டும் வருண் மறுத்துவிட்டார். பின் சத்யாவை பார்க்க மனோகர் சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author