Mouna Ragam 2 Today Episode | 21.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.07.2022

Mouna Ragam 2. 21.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் கண் முளித்தாலும் அவரால் வலி தாங்க முடியவில்லை. மயக்கம் தெளிய தெளிய வலி அதிகரித்தது. இதனால் ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் உடனே நிர்சை அழைக்க கிளம்பினார். அந்த நேரம் சக்தி அங்கே வந்தார். கார்த்திக் வலியை பார்த்து உடனே இந்த வழி நிவாரணி மாத்திரையை கொடுக்க வேண்டும் என்று கொடுத்தார். அதற்குள் ஸ்ருதி அங்கு நர்சுடன் வந்து சேர்ந்தார். பின் சக்தி மாத்திரை கொடுத்துவிட்டார் என்று தெரிந்ததும் இனி சரி ஆகி விடும் என்று கூறிவிட்டார். இதனால் ஸ்ருதி மேலும் கோவம் கொண்டார். தனக்கு முன் சக்தியே எல்லாம் செய்வதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. உடனே காதம்பாரியிடம் கூறினார். அந்த சக்தி மல்லிகாவும் தான் அப்பாவை தாங்குவது போல் நடிப்பதாக கூறினார். மேலும் சக்தி கார்த்திக்கு பாட்டு பாடி அவரை தூங்க வைத்தார். அவரை கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். இதெல்லாம் காதம்பாரி மற்றும் ஸ்ருதியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மேலும் கார்த்திக்கை உடனே சென்னைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தார்கள். அதே நேரம் மல்லிகா அவரை சென்னைக்கே அனுப்பி வைத்து விடலாம் மேலும் பிரச்சனையை வளக்க வேண்டாம் என்று நினைத்தார். அதற்கு பழனி சொர்ணம் லட்சுமி யாருமே ஒத்துக்கொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author