Mouna Ragam 2 Today Episode | 28.07.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் மனம் விட்டு பேச நேரம் கிடைத்தது. சக்தி சிறு வயதில் இருந்து என்னவெல்லாம் கஷ்ட பட்டு இருக்கிறார் என்று வருண் குற்றாலத்தில் இருக்கும் போது தெரிந்து கொண்டதாக கூறினார். மேலும் இனிமேல் அந்த கஷ்டங்கள் எதுவும் இருக்காது என்றும் கூறினார். அதே நேரம் சக்தி தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசி பட்டதாக கூறினார். சக்தி தன்னுடன் வருண், அப்பா, அம்மா, மாமா, அத்தை, பாட்டி என்று அனைவரும் தன்னோடு இருப்பதால் இந்த வாழ்க்கை போதும் என்றார். இதற்காக பல வருடங்கள் ஏங்கி இருப்பதாக கூறினார். தனக்காக யோசிக்கும் கணவன், தனக்கு ஒரு பிரச்சனை என்றால் வரும் அப்பா என்று வாழ்க்கை அழகாக அமைந்து உள்ளது என்று கூறினார். அதே நேரம் மல்லிகாவின் கார்த்திக் உடன் பேச வைக்க சொர்ணம் முயற்சி செய்கிறார். ஆனால் மல்லிகா அதற்கு பிடி கொடுக்கவில்லை. மேலும் கார்த்திக் குணம் ஆனதும் இங்கு இருந்து கிளம்பி சென்னை செல்வதே அனைவருக்கும் நல்லது என்று கூறினார். இது வெறும் தற்காலிக வாழ்க்கையே என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…