’தற்போதைக்கு மறுமணம் செய்யும் நோக்கம் இல்லை’ – மேக்னா ராஜ்
மேக்னா ராஜ் அவர்களின் மறுமணம் குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தற்போதைக்கு மறுமணம் செய்யும் நோக்கம் இல்லை என்று மேக்னா அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு மேக்னா ராஜ் அவர்களின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் இறந்ததில் இருந்து இன்று வரை மேக்னா அவர்களின் மறுமணம் பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவரோ ‘தற்போதைக்கு மறுமணம் இல்லை’ என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
“ ஒருவர் மீளா துயரத்தில் இருக்கும் போது அவரை தனிமையில் விடுங்கள், அவர்களை சுற்றி வதந்திகளை விடாதீர்கள். அது அவர்களை இன்னும் காயப்படுத்தும் “