சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் பெடரர்!

Roger Federer Retires From International Tournament

Roger Federer Retires From International Tournament

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வந்த ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

41 வயதாகும் ரோஜர் பெடரர், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தற்போதைய தொடர்களில் அவரின் முன்னேற்றம் என்பது பெரிதாக இல்லை. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம், 103 சர்வதேச பட்டங்களை வென்று இருக்கும் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்து இருப்பதை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

“ லெஜண்ட்களை வயது நிறுத்தினாலும் கூட என்றும் அவர்கள் லெஜண்ட் தான் என்பது ரசிகர்களுக்கு தெரியும். அந்த வகையில் பெடரரும் மக்கள் மனதில் என்றும் லெஜண்ட் தான் “

About Author