Mouna Ragam 2 Today Episode | 19.09.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஷீலாவின் மறு முகம் தெரிந்ததும் மனோகர் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். ஆனால் ஷீலா ஸ்ருதியும் இதில் சம்மந்த பட்டு இருப்பதை சொல்லவே இல்லை. இதனால் ஸ்ருதி ஷீலாவை தன் தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஷீலாவும் ருக்மணியிடன் சென்று சக்தியை கொலை செய்தே ஆகவேண்டும் என்று கூறினார். பின் மனோகர் மற்றும் தருண் இருவருமே நடந்ததை நினைத்து கோவத்தில் இருந்தார்கள். வருண் தன அம்மா ஸ்தானத்தில் நினைத்த அத்தை தனக்கே இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் செய்து இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று அழுது புலம்பினார். அவரை சக்தி அவர் அருகில் அமர்ந்து ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இனி யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்று கூறினார். ஆனால் சக்தியை மட்டுமே முழுக்க முழுக்க நம்புவதாக கூறினார். தருண் இத்தனை வருடம் ஆகியும் தன்னால் உனக்கு நடந்த அநியாயத்தை கவனிக்காமல் இருந்து இருப்பதை நினைத்து வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…