IND vs AUS | 2nd T20 | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா’
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
மழையின் காரணமாக தோன்றிய ஈர மைதானத்தால், 8 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவருக்கு 90 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி, ரோஹிட் சர்மாவின் அதிரடியால் 4 பால்கள் மிச்சமிருக்க வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆக்கியது.
“ கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது, முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு போர் என்று அடித்துக் கொடுத்து பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக் “