மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் மோர்டஸா கியாஷியை 2-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா , ஈரானின் மோர்டஸாவை எதிர்கொண்டார். முதலில் மோர்டஸாவே முன்னிலை வகித்த நிலையில் அதற்கு பின் சுதாரித்து அதிரடியாக விளையாடிய பஜ்ரங் புனியா, 2-1 என்ற கணக்கில் மோர்டஸாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்றே நடைபெறும் அந்த அரையிறுதி ஆட்டத்தில் அஜர்பெய்ஜான் மல்யுத்த வீரர் ஹாஜி அலியேவ்வை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா.
” Go For Gold Bajrang Punia “