Mouna Ragam 2 Today Episode | 12.10.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் நடிப்பை தருண் இடம் மேலும் நடத்தினார். தன் குழந்தைக்கு பெயர் முதல் கொண்டு தேர்வு செய்து விட்டேன் என்று நாடகம் ஆடினார். அதையும் தருண் நம்பி ஆறுதல் கூறினார். சக்தி தருண் மற்றும் ஸ்ருதி இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் ஸ்ருதி தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். ஸ்க்தி தன் மேல் உள்ள கோவத்தை தன் குழந்தை மேல் காட்டிவிட்டாள் என்று பழி போட்டார். மேலும் இது போல் தான் எல்லாரையும் நம்ப வைத்து ஏமாற்றுகிறாள் என்று தருண் இடம் கூறினார். அதையும் தருண் நம்பி சக்தியை வெளியே அனுப்பினார். சக்தி அழுவதை பார்த்து வருண் நடந்ததை கணித்தார். இதனால் தருண் மற்றும் வருண் இருவரும் சண்டை பிட் ஆரம்பித்தார்கள். சண்டை பெரிதாகவே மனோகர் அவர்களை தடுத்து நிறுத்தி அவரவர் அறைக்கு செல்லும்படி கூறினார். மனோகருக்கும் சக்தி மேல் சிறு வருத்தம் இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author