Mouna Ragam 2 Today Episode | 14.10.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கின் அம்மா ஸ்ருதியின் நிலையை நினைத்து அழுது புலம்பினார். இதை பார்த்த சொர்ணம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது ஸ்ருதிக்கு கரு கலைந்துவிட்டது என்று கூறினார். இதை கேட்ட சொர்ணம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது எல்லாம் நம்பும்படியே இல்லையே என்று கூறினார். ஆனால் பாட்டி இதில் யாராவது பொய் சொல்ல முடியுமா என்றார். மேலும் கரு கலைந்ததற்கு சக்திதான் காரணம் என்று கூறுவதாக கூறினார். இதை கேட்டதும் சொர்ணம் கோவத்தில் கொந்தலித்தார். இதை கேட்டல் எதோ நாடகம் போடுவது போல் தெரிந்தது சோர்ணத்துக்கு. உடனே சக்தியை பார்க்க கிளம்பினார். போனதும் ஸ்ருதியை பார்த்து பேசினார். நீ உண்மையிலேயே கர்பமாக இருந்தியா என்று கேட்டார். மேலும் உன்மேல் சந்தேகம் தான் வருகிறது என்று கூறினார். ஆனால் ஸ்ருதி இல்லவே இல்லை, தான் கர்பமாக தான் இருந்தேன் என்று கூறினார். ஆனாலும் சொர்ணம், பொய் எப்போதும் கை கொடுக்காது என்று கூறினார். பின் சக்தியை பார்த்து என்ன நடக்கிறது என்று விசாரித்தார். அது எப்படி நீ தான் ஸ்ருதியை தள்ளி விட்டது போல் கதை கட்டலாம் என்று கேட்டார். ஆனால் சக்தி அதை பெருசு படுத்த வேண்டாம் என்று கூறினார். மேலும் சொர்ணம் ஸ்ருதிக்கு அப்பா கார்த்திக் இல்லை என்பதும் தெரிவதை தெரிய படுத்தினார். ஆனால் சக்தி இதை வெளியே சொல்லவே கூடாது என்று சத்தியம் வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….