Mouna Ragam 2 Serial Today Episode | 17.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.10.2022

Mouna Ragam 2. 17.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்தி இடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஸ்ருதி சொர்ணம் செய்த சத்தியத்தை நினைவு வைத்து க்கொள்ள கூறினார். பின் சோர்னம் வீட்டுக்கு கிளம்ப போகும் நேரம் பார்த்து ருக்மணி மற்றும் காதம்பரி வந்தார்கள். வந்தவர்கள் வேண்டும் என்றே சக்தி செய்யாததை செய்ததாக மீண்டும் சொர்ணம் இடம் குத்திக்காட்டினார். அதை கேட்டதும் சொர்ணம் அவர்களையும் விட்டு வைக்காமல் எகிரினார். அடுத்து யாரை கொலை செய்ய திட்டம் போடுவதாக கேட்டார்கள். அதை கேட்ட வருண் கொந்தளித்தார். இது போன்ற விஷயங்களை அனைத்தும் நீங்கள் செய்து பழகி விட்டதால் அதையே அனைவரும் செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார். சக்தி அவரை பேசாமல் இருக்க சொல்ல முயற்சி செய்தார். ஆனால் வருண் கோவத்தில் சக்தியை கத்தினார். இது போன்ற ஆட்களிடம் எதற்கு பணிந்து போகிறாய் என்று கத்தினார். பின் ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் ஸ்ருதி அறைக்கு சென்றார்கள். அங்கு சென்று ஸ்ருதியிடம் மேலும் யாருக்கும் சந்தேகம் வந்ததா என்று விசாரித்தார்கள். ஸ்ருதி அதெல்லாம் எந்த சந்தேகமும் இல்லை, நான் கர்ப்பமாக இருந்தேன் என்று நம்பி அதை சக்தி தான் கெடுத்தாள் என்றும் தான் நம்புகிறார்கள் என்று கூறினார். மேலும் தருண் தன் மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பதாக கூறினார். இதை வைத்தே உண்மமையிலே கர்ப்பம் ஆகிவிடலாம். சக்தியை வெறிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று சந்தோசமாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author