Mouna Ragam 2 Today Episode | 18.10.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி மாடியில் குதித்து விளையாடினார். அதை பார்த்த ஆனந்தி உடனே சக்தியை அழைத்து காட்டினார். உடனே சக்தி ஸ்ருதியை பார்த்து மாத்திரை சாப்பிடுவது இல்லை, இப்படி ஓய்வு எடுக்காமல் எதற்காக குதித்து விளையாட வேண்டும் என்று கேட்டார். ஆனால் ஸ்ருதி எப்போதும் போல சக்தியை திமிராக பேசி அனுப்பினார். இதனால் மேலும் சந்தேகம் வந்தது சக்திக்கு. இதனால் ஸ்ருதியை பார்த்த அந்த டாக்டரை பார்த்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்தார். பின் வருண் மூலம் தருண் இடம் எந்த மருத்துவமனை என்று கேட்டு தெரிந்து கொண்டு உடனே அந்த டாக்டரை பார்க்க கிளம்பினார். அந்த டாக்டரை பார்க்கவும் செய்தார். அந்த டாக்டரிடம் நடந்த உண்மையை கேட்டு தெரிந்து கொண்டார். ஸ்ருதிக்கு கர்ப்பமும் இல்லை, அது கலையவும் இல்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் சக்தி. வீட்டுக்கு வந்ததும் அவரால் வேறு எந்த வேலையும் செய்யாமல் வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…