மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா- டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் சாவுர் யுகுயேவிடம் போராடி தோற்றார். தங்கம் எட்டவில்லை எனினும் பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு மற்றும் ஒரு வெள்ளியை பெற்று தந்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா.
அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை அதிரடியாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ரவிக்குமார் தாஹியா. தங்கம் வெல்வார் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் 4-7 என்ற கணக்கில் ரஷ்யவீரரிடம் போராடி தோற்று சில்வரை மட்டும் தன் வசப்படுத்தியுள்ளார்.
“ 23 வயது தானே, இன்னும் பல ஒலிம்பிக்கை பார்க்கலாம் அதில் தங்கத்தை நிலை நாட்டிக் கொள்ளலாம், ரவிக்குமார் தாஹியா ”