Mouna Ragam 2 Today Episode | 06.01.2023 | Vijaytv

Mouna Ragam 2. 06.01.2023

Mouna Ragam 2. 06.01.2023

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அம்மாவிடம் இது வரை நடந்த நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார். கஸ்தூரி என்னதான் சிரித்து பேசினாலும் சக்தியின் பேச்சு எடுதாலோ, சக்தியை பார்த்தாலோ அவர் ஒதுக்கி வைப்பது போல் நடந்து கொண்டார். இதை கவனித்த வருண், சக்தியிடம் இதை பற்றி பேசினார். ஆனால் சக்தி அதெல்லாம் போக போக சரி ஆகி விடும் என்று நம்பிக்கையாக கூறினார். ஆனால் வருண் மனதில் ஸ்ருதி மீது ஒரு சந்தேகத்தில் இருந்தார். கார்த்திக் மற்றும் மல்லிகா பாடிய பாட்டு அருமையாக வந்து இருப்பதாகவும் பல பேர் பாராட்டினார்கள். மேலும் மனோகர், தருண், வருண், சக்தி என்று அனைவரும் சேர்ந்து கார்த்திக் மற்றும் மல்லிகாவை வாழ்த்த வந்து இருந்தார்கள். ஆள் ஆளுக்கு இருவரையும் பாராட்டி தள்ளினார்கள். ஸ்ருதிக்கு இங்கு நடக்கும் எதையும் பார்க்க பிடிக்காமல் எரிச்சலில் இருந்தார். சக்தி இப்போது தான் வாழ்க்கையில் இவளோ சந்தோசத்தை அடுத்தடுத்து பார்க்கிறேன் என்று பூறித்தார். அதே போல் காதம்பரி அந்த வீடியோவை பார்த்து கோவத்தின் உச்சத்தில் இருந்தார். தன் வாழ்க்கையை சீரழித்த மல்லிகாவை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். மேலும் என் வாழ்க்கையை சரி செய்ய எதுவுமே செய்யவில்லை என்று விஸ்வநாதன் மேல் கோவத்தில் கத்தினார். இதற்கு அவர் வராமலே இருக்கலாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author