பிக்பாஸ் 6 தமிழ் சீசன் 6 விறுவிறுப்பான கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அசீம் அவர்களை ஒட்டு மொத்த இல்லத்தார்களும் வார்த்தைகளால் தாக்க துவங்கி இருக்கின்றனர்.
யார் இந்த பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியற்றவர்கள்? என்ற கேள்விக்கு ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸ்சும் சொன்ன ஒரே பதில் அசீம். இந்த பிக்பாஸ் ஹவுஸ்சில் அவர் மட்டும் தான் தகுதியற்றவரா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் ஒட்டு மொத்த இல்லத்தாரும் அவரை குறிவைத்து வார்த்தை போர் நடத்தியதாகவே நேற்று புலப்பட்டது.
“ கோபம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி விட்டு அவர் மீது வார்த்தை தாக்குதல் நடத்திய பலரும், அவரின் மற்ற குணங்களையும், தங்களது அருகில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களையும் மறந்து விட்டனர் போல “