பொங்கல் அன்று வெளியாகி ஹிட் அடித்து இருந்த ‘துணிவு’ திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
பொங்கல் அன்று வாரிசு திரைப்படத்துடன் களம் இறங்கி மாஸ் ஹிட் அடித்து இருந்த நடிகர் அஜித்குமார் அவர்களின் துணிவு திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழி ஆடியோக்களில் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
“ முன்காலத்தில் திரையரங்கில் வெளியான ஒருபடத்தை டிவியில் பார்க்க ஒரு வருடம் ஆகும், ஆனால் தற்போதெல்லாம் புதிய திரைப்படங்களை 1 மாதத்திற்குள் வாங்கி அதை வலைதளத்திலும் வெளியிட்டு வலைதள நிறுவனங்கள் அந்த காலக்கட்டத்தை சுருக்கி இருக்கின்றன “