துருக்கி நிலநடுக்கம், பலி எண்ணிக்கை 20,000-க்கும் மேலாக உயர்வு!
துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டினையே சீர்குலைத்து இருக்கிறது. ஒட்டு மொத்த பலி எண்ணிக்கையும் 20,000-த்தை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாட்டின் அமைச்சகம் கவலை தெரிவித்து இருக்கிறது.
“ ஏற்கனவே துருக்கி நிலதட்டுகள் உராயும் பகுதி என அறியப்படுகிறது, கட்டிட மேலாண்மையை துருக்கி சரி செய்யவில்லையெனில், இந்த பாதிப்பு வரும்காலங்களில் பன்மடங்காகும் என பேரிடர் விஞ்ஞானிகள் குழு எச்சரித்து இருக்கின்றனர் “