TNPSC Group 2 மெயின்ஸ் எக்சாமில் குழப்பம், மறுதேர்வு குறித்து ஆலோசனையா?

TNPSC Group 2 Mains Reexam Plan Idamporul

TNPSC Group 2 Mains Reexam Plan Idamporul

TNPSC குரூப் 2 மெயின்ஸ் எக்சாமில் நடந்த குழப்பத்தால் பல்வேறு தரப்பினரும் ஆணையத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த குரூப் 2 மெயின்ஸ் எக்சாமில், வருகைப் பதிவேட்டில் உள்ள பதிவெண்ணும், வினாத்தாளில் உள்ள பதிவெண்ணும் வேறு வேறாக இருந்ததால் பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான தேர்வர்கள் விரக்திக்கு உள்ளானதால் ஆணையம் மீது கண்டனங்கள் குவிந்து வருகிறது.

“ ஒரு சில தேர்வர்கள் இந்த குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வெளியில் சென்று மொபைலில் கேள்விகளை தேடி மறுபடியும் உள்நுழைந்து தேர்வை தொடர்ந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்ததால் மறுதேர்வுக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது “

About Author