ஜூனியர் NTR அவர்களின் 30 ஆவது திரைப்படத்தில் நடிகையாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் கொரட்டலா சிவா அவர்களின் இயக்கத்தில் ஜூனியர் NTR அவர்களின் 30 ஆவது திரைப்படம் பிரம்மாண்டம் எடுத்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் நடிகை ஜான்வி கபூர் படத்தில் இணைந்து இருக்கிறார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி இந்த சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
“ ஏற்கனவே சீயான் விக்ரம், இசை அனிருத் என்று படத்திற்கு வலு கூடிக் கொண்டே சென்று கொண்டு இருக்கும் வேளையில், ஜான்வியும் இணைந்து இருப்பது இன்னும் படத்தை வலுப்படுத்தும் “