மகளிர் குத்துச்சண்டை: வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின்
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியிடம் தோற்ற நிலையில் தற்போது வெண்கலப்பதக்கத்தை பெறுகிறார்.
மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் முதல் அரையிறுதியில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெயின் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய புஷானெஸ், லவ்லினாவிற்கு ஒரு புள்ளியைக்கூட விட்டுக்கொடுக்காமல் 5-0 என்ற கணக்கில் ஆக்ரோஷமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லையெனினும் வெண்கலப்பதக்கத்தை வென்று இந்திய பதக்க பட்டியலில் மற்றுமொரு பதக்கத்தை லவ்லினா சேர்த்திருப்பது பெருமைக்குரியதே….!
” மற்றுமொரு பதக்கத்தை இந்திய பட்டியலில் சேர்த்த தங்க மங்கை லவ்லினாவிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ”
About Author
Auto Amazon Links: No products found.