வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் ஜெர்மனியும் மோதிக்கொள்கின்றன.
முதல் அரையிறுதியில் பெல்ஜியத்திடம் 5-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோற்றிருந்த நிலையில் தற்போது வெண்கலத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5 அன்று ஜெர்மனியை எதிர் கொள்கிறது. அதே நாளில் தங்க பதக்கத்திற்கான போட்டியில் உலக ஹாக்கி தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் அணிகளான ஆஸ்திரேலியாவும், பெல்ஜியமும் மோதிக்கொள்கின்றன. எதுவாகினும் இரண்டு போட்டியிலும் எப்படியும் அனல் பறக்க போவது நிச்சயம்.
” நம் தேசிய விளையாட்டிற்கான ஒரு அங்கீகாரமாய் இந்த போட்டியையும் பதக்கத்தையும் வென்று நம் தேசிய கொடியை ஒலிம்பிக் அரங்கில் அரங்கேற்றுங்கள் சிங்கங்களே “