Barathi Kannamma 2 Today Episode | 27.04.2023 | Vijaytv

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, பாரதி தன் சந்தோசத்தை கண்ணம்மாவுடன் பகிர்ந்தார். அவரது அம்மா அவரை ஏற்றுக்கொண்டார் என்றும், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார். இதனால் கண்ணம்மாவும் சதோசம் அடைந்தார். மேலும் பிறந்தநாளை கொண்டாட சௌந்தர்யா இங்கு தான் வருகிறார் என்று கூறினார். உடனே அதற்க்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்தே எல்லா வகையிலும் சௌந்தர்யாவை சந்தோஷப்படுத்த முயற்சி செய்தார்கள். பின் சௌந்தர்யா வந்த உடன் கண்ணம்மா அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆனால் இதை வெண்பா பார்த்து எரிச்சல் அடைந்தார். குழந்தைகள் நிறைய பேர் பூக்களை சௌந்தர்யாவுக்கு வரிசையாக கொடுத்தார்கள். பின் அவருக்காக ஒரு பெரிய பேனர் அடித்து கொண்டாட்டத்தை ஆரம்பித்தார்கள். இதை எதையுமே பார்க்க விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அங்கு நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author