’லியோ’ திரைப்படத்தின் US வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமொன்று நல்ல விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும், லியோ திரைப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரத்யாங்கிரா சினிமாஸ் என்ற நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத விலைக்கு லியோ US வெளியீட்டு உரிமை கைப்பற்றப்பட்டு இருக்கிறதாம்.
“ விக்ரம் திரைப்படம் உருவாக்கிய ஒரு மாபெரும் பிம்பம், தற்போது லியோ மீதும் உருவெடுத்து இருப்பதால் அயல்நாட்டு வெளியீட்டு நிறுவனத்தினர் போட்டி போட்டிக் கொண்டு, கேட்கும் விலைக்கு வாங்கு விடுகின்றனராம் “