Tamizhum Saraswathiyum Today Episode | 12.06.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இந்த தேர்தலில் என்ன செய்கிறார் என்பதை கேள்விப்பட்டு நடேசன் சரஸ்வதியை பார்க்க வந்து இருந்தார். அப்போது சரஸ்வதி தமிழ் செய்யப்போகும் நல்ல விஷயங்களை சொல்லி ஓட்டு வாங்குவதை கேட்டு நடேசன் மிகவும் சந்தோசம் கொண்டார். அவனுக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும், ஆனால் அம்மாவும் பிள்ளையும் இப்படி போட்டி போடுவது மட்டும் தான் உறுத்தலாக உள்ளது என்று கூறினார். மேலும் நமச்சியிடம் தான் செய்தது தவறு என்று புரிய வைத்தார். என் மகனை நம்பாமல் அர்ஜுனை நம்பியது நான் செய்த பெரிய தவறு. தமிழ் எந்த தவறும் செய்யவில்லை என்பதை தான் நிரூபிப்பேன் என்று கூறினார். நடேசன் பேசுவதை தமிழ் ஒளிந்து இருந்து கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால் அவர் அப்பா தன்னை பற்றி புரிந்து கொண்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். அதே போல் வீட்டுக்கு வந்தும் நடேசன் தமிழ் செய்வது பெரிய விஷயம், தான் என்ன செய்வேன் என்று சொல்லி ஓட்டு வாங்குவது நல்ல விஷயம் என்று பெருமையாக கூறினார். ஆனால் அதையும் அர்ஜுன் கோதையிடம் தவறாக சித்தரித்து பேசினார். முடிந்த வரை நடேசன் மற்றும் வசுந்தரா தமிழுக்கு சப்போர்ட்டாக பேசினார்கள். ஆனால் கோதை இதையும் தவறாகவே புரிந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author