தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓ பி ரவீந்திராத்தின் வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம்

OP Ravindranath Election Victory Is Invalid Says High Court Idamporul

OP Ravindranath Election Victory Is Invalid Says High Court Idamporul

தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ஓ பி ரவீந்திரநாத் சொத்துப்பட்டியலில் பல்வேறு விடயங்களை மறைத்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரது வெற்றியை செல்லாது என அறிவித்து இருக்கிறது. தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலமும் கொடுத்து இருக்கிறது உயர்நீதிமன்றம்.

“ இந்த தீர்ப்பு குறித்து மக்கள் கூறுகையில், தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரின் சொத்துப்பட்டியலையும் முறையாக விசாரித்தால் இங்கு ஒருவரின் வெற்றியும் செல்லாது என இணையத்தில் நக்கலடித்து வருகின்றனர் “

About Author