கேப்டன் என்ற பதவிக்கே உரித்தான, தலைவன் தோனிக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday MS Dhoni 07 07 23 Idamporul

Happy Birthday MS Dhoni 07 07 23 Idamporul

கேப்டன் என்ற பதவிக்காகவே பிறந்த தலைவன் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

ஒட்டு மொத்த அணியும், ரசிகர்களும் தலையை தொங்க விட்டு ’அய்யோ மேட்ச் நம்ம பக்கம் இருந்து போற மாறி இருக்கே’ என்ற நிலையில் இருக்கும் போது ஒருத்தர் களம் இறங்குவார். கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு போய் அசால்ட்டா மேட்ச பினிஷ் பண்ணி கொடுத்துட்டு அமைதியா ஸ்டம்ப தூக்கிட்டு வருவார் அவர் தான் இன்றைய பிறந்தநாள் நாயகன் தோனி.

சாதுரியம், அமைதி, சிறந்த தலைமை மாண்பு இந்த மூன்றுமே அவரது இத்துனை சாதனைகளுக்கும் காரணம் என்று அடித்து சொல்லலாம். அவருக்கு பிறகு வந்த எந்த தலைமையாலும் தற்போது வரை இந்திய அணிக்கு ஒரு உலககோப்பை கூட வாங்கி கொடுக்க முடியவில்லை. காரணம் தோனி என்பவர் இங்கு ஒருவரே.

“ நாளை ஏதாவது ஒரு தலைமை வந்து உலககோப்பையை இந்திய அணியின் கைகளில் கொடுத்தாலும் கூட, தோனி அளவிற்கு அந்த தலைமைப் பண்பில் செய்த சாதனைகளை அவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே “

About Author