’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருக்கிறார். 6 மாத காலக்கட்டத்தில் 125 நாட்களுக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.
“ அக்டோபர் 19 ரிலீஸ் தேதி என்பதால் மற்ற ப்ரீ ப்ரொடக்சன்ஸ் வேலையையும் உடனடியாக துவங்கி இருக்கிறது படக்குழு, வெகு விரைவில் ட்ரெயிலர் அப்டேட்டையும் எதிர்பார்க்கலாம் “