இந்திய அணியை உலககோப்பைக்கு நேர்மறையான எண்ணங்களுடன் அனுப்பி வையுங்கள் – அஷ்வின்

R Ashwin

R Ashwin

இந்திய அணியை உலககோப்பைக்கு நேர்ம்றையான எண்ணங்களுடன் அனுப்பி வையுங்கள் என இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் அஷ்வின் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக ரசிகர்கள் ஆத்திரத்துடன் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இது அவர்களின் விளையாட்டை நிச்சயம் களத்தில் பாதிக்கும். ஆதலால் இந்திய அணியை ஒரு நேர்மறையான எண்ணங்களுடன் உலககோப்பைக்கு அனுப்பி வையுங்கள் என ரவிச்சந்திரன் அஷ்வின் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

தொடர்ந்து இந்திய அணி சரியான கலவையில் வீரர்களை தேர்ந்து எடுக்காமல் எல்லா சீரிஸ்களிலும் சொதப்பி வருகிறது. இதனால் ரசிகர்கள் ஆத்திரத்திடன் இணையதளங்களில் இந்திய அணிக்கு எதிராக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரசிகரோ, இல்லை தனி ஒரு வீரரோ இந்திய அணியை கட்டமைத்து விட முடியாது. பிசிசிஐ சரியான தேர்வாளர்களை நியமித்து இந்திய அணியை வலுவாக கட்டமைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

“ சீனியர் வீரர்கள் பலரும் பிசிசிஐக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் கூட அஷ்வின் வைக்கும் கோரிக்கையை மனதில் வைத்து பதிவுகளை நிறுத்துவர். ஆனால் பிசிசிஐ திருந்தாது என ஒரு சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் “

About Author