தொடர்ந்து இரண்டு தோல்வி, ஹர்திக்கை வெளுத்து வாங்கும் இணையதள ரசிகர்கள்!

Indian Cricket Fans Slamming Hardik For Continuous Two Losses Idamporul

Indian Cricket Fans Slamming Hardik For Continuous Two Losses Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை இந்திய அணி சந்தித்து இருப்பதால் கேப்டன் ஹர்திக்கை இணையதள ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி. இந்த தோல்விகளுக்கு ஹர்திக்கின் தவறான அணுகுமுறைகளே காரணம் என இணையதள ரசிகர்கள் அவர்களை கடுமையாக சாடி வருகின்றனர்.

ஒட்டு மொத்தமாகவே தற்போது இருக்கும் அணியின் மீது ரசிகர்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. ஒவ்வொரு சீரிஸ்க்கும் ஸ்குவாட் பிளேயர்களை மாற்றி மாற்றி விளையாட வைத்து அணியின் கட்டமைப்பையே உடைத்து எறிந்து இருக்கிறது பிசிசிஐ. முக்கியமாக ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது தவறான அணுகுமுறை என ரசிகர்கள் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“ ரசிகர்கள் சொல்வதும் ஓரளவிற்கு யோசிக்க வேண்டியதாக தான் இருக்கிறது. உலககோப்பை முடியும் வரையில் ஆவது ஒரே அணியை விளையாட வைத்து கேப்டனையும் அடிக்கடி மாற்றாமல் இந்திய அணியை பரிசோதித்து இருக்கலாம் “

About Author