பிரிகிறார்களா, பிக்பாஸ் தமிழ் சீசன் ஐந்தில் இணைந்த இணையான அமீர் மற்றும் பாவ்னி?
பிக்பாஸ் சீசன் 5 மூலம் ஜோடிகளான அமீர் மற்றும் பாவ்னி ஒரு சில காரணங்களால் தற்போது பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 5 மூலம் உருவான காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவ்னி. இருவரும் வெளிவந்த பின்னரும் கூட ஒன்றாக இணைந்து ஆல்பம் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தனர். ஆனால் தற்போது இருவரும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தனித்தனியே பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
பாவ்னி அவர்களின் அவரின் இன்ஸ்டா பாலோவர் ஒருவர் ‘Are You Single?’ என கேட்ட போது, ‘ஆம்’ என்று பதிலளித்து இருக்கிறார் பாவ்னி. இதுவும் அவர்கள் பிரிந்து விட்டதையே உணர்த்துகிறது. தற்போதெல்லாம் பொதுவெளிகளில் அவர்களை இணைந்து பார்க்க முடிவதில்லை என அவர்களின் நெருங்கிய நண்பர்களும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
“ ஐந்து சீசனாக பிக்பாஸ்சில் ஜோடியாகும் யாரும் இதுவரை இணைந்ததாக சரித்திரம் இல்லை, அது அமீர் – பாவ்னி விஷயத்திலும் உண்மையாகி விட்டதோ என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்”