ஓய்வை திரும்ப பெற்றார் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைகிறார்!

ஓய்வை திரும்ப பெற்றார் பென் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைகிறார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வை திரும்ப பெற்று இருக்கிறார். வருகின்ற நியூசிலாந்து தொடருக்கு எதிரான ஸ்குவாடிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரும் உலககோப்பை தொடரிலும், ஸ்குவாடில் அவரை இணைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து இருக்கிறதாம்.

Ben Stokes WC Winning Moment 2019 Idamporul
Ben Stokes WC Winning Moment 2019 Idamporul

இந்திய அணியைப் போல இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரும் வீக்காகவே இருக்கிறது. புதிதாக ஒரு பிளேயரை இணைத்து குறுகிய காலக்கட்டத்தில் அவரை பரிசோதிக்க முடியாது என்பதை உணர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ்சை திரும்ப அழைத்து இருப்பது ஒரு நல்ல முடிவு தான்.

” இங்கிலாந்து அணிக்கு ஒவ்வொரு முக்கியமான தொடர்களிலும் பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டு இருக்கிறார். இந்த உலககோப்பையிலும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்காக அவரது சிறந்த பங்கினை அளிப்பார் என்பதில் ஐயமில்லை “

About Author