பிரபல மலையாள தயாரிப்பாளரை மணக்க இருக்கிறாரா நடிகை த்ரிஷா?

பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரை நடிகை த்ரிஷா கிருஷ்ணன் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

லியோ, விடா முயற்சி, பெயரிடப்படாத கமல் ஹாசன் ப்ராஜெக்ட் என்று செம்ம பிசியாக இருக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வெகுவிரைவில் திருமணத்திலும் பிசியாக இருக்க இருக்கிறாராம். மலையாள தயாரிப்பாளர் ஒருவருக்கும், த்ரிஷா அவர்களுக்கும் அமைதியாக திருமண பேச்சு நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

“ ஏற்கனவே நடிகர் த்ரிஷா கிருஷ்ணன் அவர்களுக்கு 2015-யில் தொழிலதிபர் வருண் மணியன் அவர்களுடன் நிச்சயம் எல்லாம் முடிந்து ஒரு சில காரணங்களால் திருமணம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது “

About Author