Bigg Boss Tamil 7 | Day 4 | ‘வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வெயிட்டான டாஸ்க்’
வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காக ‘வெயிட்டு பார்ட்டி’ என்ற வெயிட்டான டாஸ்க்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ்.
பிக்பாஸ் மார்க்கெட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் வாங்கிய பொருள்களுக்கான கடனை திருப்பி செலுத்த, வெயிட்டு பார்ட்டி என்ற புதிய டாஸ்க் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிக்பாஸ். டாஸ்க்கின் படி இல்லத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருளை தூக்கிக்கொண்டு போட்டியாளர்கள் வெயிட் மெசினில் வந்து நிற்க வேண்டும். அதற்கு பின்னர் என்ன என்பதை எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.
“ இந்த பிக்பாஸ்சில் எல்லாமே புதிய ரூல்களாக தான் இருக்கிறது. ஆனால் நாமினேசன் உள்ளிட்ட சில ரூல்கள் பிசிரடிக்கிறது. அந்த ரூல்களே நாளைக்கு பிரச்சினைகளையும் கொண்டு வர வாய்ப்புகள் இருக்கிறது “