Bigg Boss Tamil 7 | Day 6 | Review | ‘முடிச்சு அவிழ்க்கப்பட்ட முதல் வார பஞ்சாயத்துகள்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஆறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: மாயா, பூர்ணிமா கான்வர்ஷேசன் – ஆக்சனை வைத்து வார்த்தை கண்டு பிடிக்கும் விளையாட்டு – கூல் சுரேஷ்சை தவறாக புரிந்து கொண்ட மாயா – அனன்யா, விசித்ரா பஞ்சாயத்து – ஜோவிகா, விசித்ரா பஞ்சாயத்து – பவாவின் கதைக்குரிய விளக்கம் – கேப்டன்சி டாஸ்க்
இந்த நாள் எபிசோடு, மாயா மற்றும் பூர்ணிமாவின் கான்வர்சேஷனில் இருந்து துவங்குகிறது. பொதுவாகவே மாயா மூன்று பேரின் மீது செம்ம காண்டில் இருக்கிறார் போல. ஒன்று கூல் சுரேஷ், இன்னொன்று பிரதீப். மற்றொன்று விசித்ரா காரணம் அவர் வந்ததில் இருந்தே இந்த மூன்று நபர்களின் குறைகளை மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பது போல தெரிகிறது. மற்ற போட்டியாளர்கள் யாரும் கண்ணில் படவில்லையா என்பது தெரியவில்லை.
அதற்கப்புறம், ஒரு கேம் ஒன்னு எல்லா போட்டியாளர்களும் இணைந்து விளையாடுறாங்க, ரவீனா ஒரு படத்தோட பேர, கூல் சுரேஷ் காதுல சொல்லுறாங்க, அத அவரு மத்த போட்டியாளர்கள்கிட்ட வார்த்தையால சொல்லாம, ஆக்சன் மூலம் நடிச்சு காட்டி, அந்த படத்தோட பேர அவங்கட்ட இருந்து வாங்கனும். இவ்ளோ தான் கேம். அவரும் நல்லாவே ஆக்சன் எல்லாம் காமிச்சு படத்தோட பேரயும் வாங்கிட்டாரு. ஆனா அவர்காட்டின பேஸ் ரியாக்சன் தான் கொஞ்சம் வேற மாறி ரியாக்ட் ஆகிட்டு.
ஒரு கேம், அதுல சாதாரணமா நடந்த ஒரு விஷயம், மாயா அல்மோஸ்ட் அந்த படத்தோட பேர கூல் சுரேஷ் ஆக்சன் வச்சு ஒரு கால்வாசி சொல்லிட்டதனால, கூல் சுரேஷ் ’கரெக்டு தான் மேல சொல்லு மேல சொல்லு’ என்பதை கொஞ்சம் முக பாவனையில் நக்கலாக காட்டினார். இது ஒரு சாதாரண நிகழ்வு தான். ஆனால் இந்த சம்பவத்தை ஏதோ ஈவ்டீசீங் மேட்டர் போல சித்தரித்து, எல்லா போட்டியாளர்கள் முன்னாடியும், ஒரு சில கேவலமான வார்த்தைகளையும் விட்டு கூல் சுரேஷ்சை கடுமையாக சாடிட்டு போயிட்டாங்க மாயா.
இந்த விஷயத்தை பொறுத்த வரைக்கும் மாயா, கூல் சுரேஷ்னா இப்படி தான்னு ஒரு மைண்ட் செட்டுக்கு ஆல்ரெடி வந்துட்டாங்க. அதுனால அவர் என்ன செஞ்சாலும் அது ஒன்னு ஒன்னையும் வேற மாறி பாக்க ஆரம்பிக்கிறாங்க. முதல்ல மாயா, கூல் சுரேஷ் பத்தின தவறான புரிதல மொத்தமா விடனும். அப்போ தான் இந்த விஷயத்துக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும்.
அதுக்கப்புறம் என்ன அனன்யாவோட டாட்டூ பஞ்சாயத்து, அனன்யா சொல்லுற விஷயம், ’அவங்க என்கிட்ட என்னோட பெர்சனல்னு தெரிஞ்சும் ஓயாம என்ன டாட்டு காட்ட சொன்னாங்க, அவங்களோட எண்ணம் என்னன்னா, நான் டாட்டூ காட்டினா பாக்குற பார்வையாளர்கள் எல்லாரும் என்ன தப்பா நினைப்பாங்க, அது தான் அவங்களுக்கு வேணும் போல’ அப்படின்னு சொன்னாங்க.
இதுக்கு விசித்ரா சொன்ன பதில் ‘அவ டாட்டூ பத்தி சொன்னதும், நான் ஒரு க்யூரியாசிட்டில தான், அவளோட டாட்டூ பத்தி கேட்டேன், வேற எதுவும் இல்ல, வெளில இருக்கிறவங்க அவள தப்பா பாக்கனும், டாட்டூ அவ குத்திக்க கூடாது, அப்படி எந்த விஷயங்களையும் நான் அவகிட்ட திணிக்கல’ என கூறியதும் அதற்கப்புறம் அனன்யாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இதற்கு கமல், ‘டாட்டூ அவங்களுக்கு பிடிக்கும்னா அவங்க பண்ணிகட்டும், எனக்கும் கூட பிடிக்கும், அது அவங்களோட பெர்சனல், அத நாம பண்ண கூடாதுன்னு சொல்றதுக்கு தான் இங்க நமக்கு உரிமை இல்லை, என் மகள் ஸ்ருதியே பண்ணிருக்கா, ஆனா நான் இதுவரைக்கும் ஏன் பண்ணன்னுலாம் கேட்டதில்லை, அது அவங்களோட உரிமை’ என கூறி டாட்டூ பஞ்சாயத்தை நிறைவு செய்தார். இங்கு ஒரு பார்வையாளனா பார்க்கும் போது விசித்ரா ஒரு பர்போஸ் ஓட எதையும் பண்ணல அப்படிங்கிறது தான் உண்மை. அதுனால அனன்யாவோட புரிதல தான் இங்கு தப்புன்னு சொல்ல முடியும். அவ்வளவு தான்.
அடுத்ததாக ஜோவிகா – விசித்ரா பஞ்சாயத்து, இங்கு விசித்ரா கூறியது ‘ஒரு அடிப்படையான கல்வி அனைவருக்கும் அவசியம்’ என்பது தான். ஆனால் இந்த சாதாரண வார்த்தையை கூறியதற்காக ஏன் ஜோவிகா அவ்வளவு ட்ரிகர் ஆனார் என்பது தான் கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறது.
’ஜோவிகாவும் சரி தான், விசித்ராவும் சரி தான், ஜோவிகா சரி என்பதற்காக படிக்கிற பையன ஏண்டா படிக்கிற, இதெல்லாம் முன்னேற தேவையில்லடான்னு படிக்கிற ஒருத்தனோட புத்தகத்த புடுங்கவும் கூடாது. இங்க படிப்பும் ஒரு சிலருக்கு சோறு போடுது. அதே மாறி விசித்ரா சொல்வது சரின்னு படிப்ப யாருகிட்டையும் திணிக்கவும் முடியாது. அவங்க போக்குல விட்டுடனும்’ என கூறி கமல்ஹாசன் இந்த விசித்ரா, ஜோவிகா இடையிலான பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
ஒரு கதையை கொஞ்சம் திரித்து சொன்னாலோ, இல்லை கதைகளில் ஒரு சில பகுதிகளை சொல்லாமல் விட்டாலோ அந்த கதையின் வடிவமே மாறி விடும் என்பதற்கு பவா தான் சான்று. பவா சொன்ன இரண்டு கதைகளிலுமே கொஞ்சல் திரிதல் இருந்ததாக கூறி, கமல் அவர்கள் கொஞ்சம் திருத்தம் செய்து அந்த கதைகளை மீண்டும் கூறினார். அவர் செய்த திருத்தத்தினால் இரண்டு கதைகளின் வடிவமுமே அதிக மாற்றத்திற்கு உள்ளானது.
அந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் ‘சிதம்பர ரகசியங்கள்’ என்ற புத்தகத்தில் இருந்து பவா ஒரு கதையை சொல்லி இருந்தார். அந்த கதையை அவர் முடித்த பின்னர் அனைவருக்கும் எழுந்த ஒரு கேள்வி ‘சாரி சார் நீங்க இவ்வளவு பெரிய எழுத்தாளர்னு தெரியாம உங்கள அறைஞ்சிட்டேன்’ அப்படின்னு தன்னோட இடுப்ப கிள்ளுன ஒருத்தர்ட்ட அந்த ஊறுகாய் விக்கிற பொண்ணு ஏன் சொல்லனும்? அப்படிங்கிறது தான்.
ஆனா உண்மையா நடந்தது. அந்த பொண்ணு பளார்னு அறைஞ்சதும், பாலச்சந்திரன் மிகவும் குறுகி நின்னு அம்மா இந்த விஷயத்த யார்கிட்டயும் சொல்லிடாதம்மான்னு சொல்லி சாரி கேட்டது பாலச்சந்திரன் தானாம், அதுக்கப்புறம் அந்த பொண்ணும் கிளம்பிடுமாம். அடிக்கிறப்போ அவளோட கண்ணாடி வளையல் கொஞ்சம் உடைஞ்சு அந்த இடத்துலயே விழுந்து இருக்கும். அப்புறம் பாலசந்திரனோட மனைவி, வீட்ட க்ளீன் பண்றப்போ கீழ கிடக்குற அந்த வளையல் துண்டுகள் யாரோடதுன்னு பாலசந்திரன் கிட்ட கேட்குறப்போ, அவர் நடந்த விஷயங்கள முழுமையா மனைவிகிட்ட சொல்லிடுவாராம். இது தான் அந்த கதையோட வடிவம். ஆனா பவா கதைகளை கொஞ்சம் திரிதல் பண்ணி சொல்லி விட்டார் போல.
இங்கு யாருமே பாலச்சந்திரன் அவர்கள் பண்ண பாலியல் சீண்டல்களை ஆதரிக்கிறவங்க இல்ல, ஆனா பாலச்சந்திரன் இந்த சிதம்பர நினைவுகளை பொதுவெளில சொன்னது பெருமைக்காக இல்ல. தன் தவறை பொதுவெளியில் ஒப்புவித்து அவர் அந்த தவறிற்காக வாங்கும் மிகப்பெரிய கசையடி தான் அந்த நூல். அது அந்த பொண்ணு கொடுத்த அடிய விட நிச்சயம் ஒரு மிகப்பெரிய அடி, அவ்வளவு தான் என கமல்ஹாசன் கூறினார். இதில் இருந்து என்ன உணர்கிறோம் என்றால் ஒரு கதை திரிக்கப்பட்டால், ஹீரோ வில்லனாகவும் வாய்ப்பு இருக்கிறது. வில்லன் ஹீரோவாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான்.
ஒரு வழியா பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சு இரண்டாவது வாரத்துக்கான கேப்டன தேர்ந்தெடுக்குற நேரம் வந்தாச்சு. இந்த ஒரு வாரத்துல பிக்பாஸ் இல்லத்துல சிறப்பா செயல்பட்ட இரண்டு பேர்னு விக்ரம் மற்றும் ஜோவிகாவ இல்லத்தார்கள் செலக்ட் பண்ணாங்க. அதே மாறி ஸ்மால் பாஸ் ஹவுஸ்ல சிறப்பா செயல்பட்டார்னு நிக்ஸன் அவர்கள, அந்த ஹவுஸ்மேட்ஸ் செலக்ட் பண்ணாங்க. கடைசியா கேப்டன்சிப் டாஸ்க் இந்த மூன்று பேருக்கு இடையில தான் என பிக்பாஸ் அறிவிச்சாரு.
டாஸ்க் ஒன்னும் பெருசா இல்ல, ஒரு மேஸ் இருக்கும், அதுக்குள்ள அங்கங்க சில காய்ன்ஸ் இருக்கும், யார் அதிகமாக காயின்ஸ் எடுத்திட்டு, யாரு முதன் முதலா மேஸ் விட்டு வெளில வராங்களோ அவங்க தான் வின்னர். மூவரும் சம அளவில் காயின் எடுத்து வெளியில் வந்து இருந்தாலும் கூட, முதல்ல மேஸ் விட்டு வெளில வந்த விக்ரம்க்கு இந்த வார கேப்டன்சி வாய்ப்பை கொடுத்தார் பிக்பாஸ். அத்தோடு முடிந்தது இந்த நாள் எபிசோடு.
“ இந்த சீசன் பிக்பாஸ் முதல் வாரமே இத்தனை பஞ்சாயத்துக்களை சந்தித்து இருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் எத்தனை பஞ்சாயத்துக்கள் தான் இருக்கிறதோ தெரியவில்லை “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !