Bigg Boss Tamil 7 | Day 8 | ’இல்லத்தை விட்டு வெளியேறினார் பவா, காரணம் என்ன?’
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய சுயமுடிவுடன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று அவரது உடல்நிலை, இன்னொன்று மற்ற போட்டியாளர்கள் அவரை நினைக்கும் விதம் அவரை பாதித்து இருப்பதாக தெரிகிறது.
இது போக நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் அவர்கள், விஜய் அவர்களை கண்டித்து கொண்டிருந்த போது செய்யும் தவறை மாற்றிக் கொள்ளாமல் ’கடவுளே வந்தாலும் தன்னோட இயல்ப மாத்திக்க மாட்டேன்’ என்று சொல்பவர்களுக்கும் ஸ்ட்ரைக் கொடுக்கப்படலாம் என பவாவிற்கு மறைமுகமாக ஒரு குட்டு வைத்தார். அதுவும் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
“ பிக்பாஸ் என்றாலே ஒரு பெரும் அழுத்தம் இருக்கும். அதை பவா போன்றவர்கள் தாங்கி கொள்ள இயலாது தான். அவரின் முடிவு சரி தான் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “