’லியோ’ ஸ்பெசல் ஷோவிற்கு அனுமதி மறுப்பு!
’லியோ’ திரைப்படம் திரையிட, காலை 4 மணி மற்றும் 7 மணி ஸ்பெசல் ஷோவிற்கு தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு இருந்த நிலையில், அரசு மறுத்து இருக்கிறது.
லியோ படக்குழு, லியோ பட வெளியீட்டிற்காக முதல் ஆறு நாட்களுக்கு மட்டும் காலை 4 மணி மற்றும் 7 மணி ஸ்பெசல் ஷோவிற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் அரசு ஸ்பெசல் ஷோவிற்கு அனுமதி மறுத்து இருப்பதாகவும், காலை 9 மணியில் இருந்து 5 ஷோக்கள் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் எனவும் அனுமதி வழங்கி இருக்கிறதாம்.
” நான்கு மணி ஷோ என்பது ரசிகர்களுக்கு ஒரு காலத்தில் வரமாக இருந்து வந்தது. இரவு முதலே திருவிழா துவங்கி விடியும் முன் படத்தை பார்த்து ரசித்த காலம் எல்லாம் முடிந்து விட்டது என ரசிகர்கள் சோகமாக ஏக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர் “