ICC WC 2023 | Match No 13 | ‘நடப்பு சாம்பியனை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்’

ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதிமூன்றாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஆப்கானிஸ்தான்.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி குர்பாஸ் 80(57) மற்றும் இக்ரம் அழிகில் 58(66) அவர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி, நிச்சயம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அப்செட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “

About Author